தொழிநுட்பமயமான உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான இலகு வழிகளை அறிந்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வேண்டும். இணையம் தொடர்பில் தேவையான அறிவினை உடையவரா? அதனைப் பயன்படுத்தி பொருளாதார தேவைகளை நிறைவேற்ற ஆசையுள்ளவரா? ஆம், எனில் இங்கே தொகுக்கப் பட்டிருக்கும் விடயங்கள் உங்களுக்கானதே. குறிப்பாக இணையவளி வருமானமீட்டலில் இருக்கும் பிரச்சினை ஏமாற்றுதாரர்களின் தொடர்புகளும் அவர்களின் சித்து விளையாட்டுக்களும். எனவே நான் தேடி, அலசி, ஆராய்ந்து உண்மைத் தன்மையான வாய்ப்புகளையும் அதற்கான தளங்களை பட்டியலிட்டிருக்கிறேன்.
1. Freelancer.
Typing, copy pasting, Image to word converting, pdf to word converting போன்றவற்றில் உள்ள அறிவையும் ஆற்றலையும் முதலிட்டு மிக இலகுவாக வருமானத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு இதுவாகும். இதற்கான தளங்கள் ஏராளமாக இருக்கிறது.
உ+ம்
Freelancer, Fivver, Truelancer, peopleperhour, Upwork, Simplyhiered
2. Affiliate Marketers.
சுருங்கச் சொன்னால் உற்பத்திப் பொருளை Promote செய்து விற்பனை தளங்களில் இருந்து வருமானத்தை ஈட்டும்முறை. அவ்வாறான தளங்களில் பதிவு செய்து அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கவர்ச்சியான முறையில் Promote செய்வதன் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம்.
உ+ம்
CJ Link, bluehost, getresponce, impact, Amazon aafiliates, ClickBank
3. புகைப்படங்களை விற்பனை செய்தல்.
புகைப்படக் கலையும் நுட்பமும் அதன்மீதான ஆர்வமும் இருப்பவர்களுக்கான வாய்ப்பே இது. நீங்கள் Click செய்த புகைப்படங்களை உரிய தளங்களில் பதிவேற்றிவிடுங்கள். புத்தகங்களுக்கு, வாராந்த, மாதாந்த சஞ்சிகைகளுக்கும் மற்றும் இணையத்தளங்களுக்கும் என பலரும் அதனை கொள்வனவு செய்வர். இதற்கான வருமானம் உங்களை வந்து சேரும்
உ+ம்
Adobe Stock, Shutterstock, Alamy, Etsy, Fotomoto, Crestock
4. Create website for Ad publish (ad publishers)
விளம்பரதாரர்களும் விளம்பரங்களும் இருக்கின்றன. இணையத் தளமொன்றை உருவாக்குவதன் ஊடாக வருமானமீட்டலாம்.
உ+ம்
Google Adsence
இணையத்தள உருவாக்கம் எவ்வாறு செய்வது கடினம் என்றெல்லாம் பயப்பட வேண்டாம். எனவே உங்களது திறனையும், முயற்சியையும், ஆர்வத்தையும் பொறுத்தே மேலுள்ள வேலைவாய்ப்புகள் வெற்றிகொள்ளப்படும். வாய்ப்புக்களையும் வழிமுறைகளையும் தளங்களையும் அடையாளப்படுத்தி இருக்கிறேன். இது தொடர்பான மேலதிக சந்தேகங்களை Comment box இல் பதிவிடுங்கள். அடுத்த பதிவில் விடை சொல்கிறேன்.
- Thank You-
0 Comments