அறிவியல் வளர்ச்சி மனித வாழ்வை இலகுபடுத்தி இருக்கிறது. எமது வாழ்வின் அடிப்படை விடயமாகக் கணணி காணப்படுகிறது. இதன் ஊடுறுவல் இல்லாத துறைகளே இல்லை.  அதன் தேவையும் பயன்பாடும் அத்தியவசியமாகக் காணப்படுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து என அதன் ஆதிக்கம் மேலோங்கியே ருக்கிறதுகல்வித்துறையின் தேவைப்பாடாக கணணி வழிக் கல்வி உணரப்பட்டிருக்கிறது. துறைசார்ந்த பலரும் கணணி வழிக்கல்வி முறைமைக்கு பாடசாலையை பழக்கப்படுத்தவும் மாணவர்களின் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும்  பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டுமென வழியுறுத்துகின்றனர்.

விசேடமாக அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களை கற்பிப்பதற்காக மடிக்கணணி ஒளியிழைவட்டுக்கள் என்பவற்றை பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களும் இதன்மூலம் கற்பிக்கத் தொடங்கிவிட்டனர். தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப திறனை வளர்க்கும் நோக்கோடு அரசாங்கம் பாடசாலைகளில் கணணி மையங்களை அமைக்கத் தொடங்கியுள்ளது. 





மனித தேவைகள் மாறிக் கொண்டே இருக்கிறது. தொழிநுட்ப யுகத்தில் திறன்களை விறுத்தி செய்வோம். வாழ்வை கணணியுடன் தொடர்கின்ற நாம் கணணிமயமாகிய உலகில் நிலைபெற தீவிரமாய் முயற்சிப்போம்.



ஆக்கம்      
       
                Muhamed Faslin Ayesha
                Grade 7
                Al Hikma Maha Vidyalam, Gampola.