உலக வெப்பமயமாதல் என்பது வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சடுதியான அதிகரிப்பாகும். கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பை விட பலமடங்கு அதிகரிப்பை இறுதிக் கால்நூற்றாண்டில் காண்கிறோம். இதில் பிரதான காரணி மனிதனே. சுய தேவையை நிறைவேற்றவும் அடுத்தவரோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறவும் இயற்கையை தாருமாறாக அழித்தான். குறிப்பாக தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காடுகளை அழித்தான். அதிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன கழிவுகள், காபன் வாயுவின் மிதமிஞ்சிய வெளியேற்றம், பயிர்ச்செய்கைக்காக மீள் உருவாக்கமற்ற காடழிப்பையும் மேற்கொண்டான்.
இவ்வாறான மனித செயற்பாடுகளால் இன்று வெப்பநிலை உயர்வடைந்திருக்கிறது. இதனால், பனிப்பாரைகள் உருகுதல், வரட்சி, காட்டுத்தீ, தண்ணீர் பற்றாக்குறை, மழைவீழ்ச்சியில் குறைவு என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதன் விளைவை மனிதனோடு சேர்த்து வனவிலங்குகள் உற்பட பல்வேறு உயிரினங்களும் அனுபவிக்கின்றன. சமகால நிகழ்வுகளை கருத்திற் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின்பால் கவணம் செலுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை பற்றிய கவலை மேலோங்கி இறுக்கிறது.
எனவே பொலித்தீன் பாவனையை குறைத்தல், உக்கக்கூடிய பொருட்களின் உற்பத்திகளை அன்றாட நடவடிக்கைகளுக்கு தெரிவு செய்தல், CFL மின்குமிழ்களை பயன்படுத்தல், மின்சாரத்தை தேவைக்கு மாத்திரம் உபயோகித்தல், தண்ணீரை விரயமாக்காது இருத்தல், மரநடுகையில் ஈடுபட்டு பிறரையும் ஊக்கப்படுத்துதல் என்பதோடு காற்று, சூரிய ஆற்றலை நோக்கி நகர்வதன் ஊடாகவும் வெப்பநிலையின் அதிவேக உயர்வை ஓரளவுக்கேனும் குறைத்திடலாம்.
எதிர்கால சந்ததியின் சுவாசத் தேவைக்காய் இயற்கையை தயார் செய்வோம்.
முயலாமையை விட ஒரு சதவீத முயற்சிப்பு பெறுமதியானது என்பதை கற்றுக்கொள்வோம். இயற்கைத்தாயை கவனிப்போம். புவிவெப்பமடைதல் பற்றி பேசுவதோடும் எழுதுவதோடும் நில்லாமல் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாய் உறுதியேற்போம்.
ஆக்கம்
Muhamed Ajwad Fathima Razna
Grade 8
Al Hikma Maha Vidyalam, Gampola.


2 Comments
நாட்டிற்கு தேவையான ஒரு நல்ல ஆக்கப்பதிவு. வாழ்த்துக்கள் ரஜ்னா.
ReplyDeletekeep in touch with us and please read others articles.
DeleteTeam
E Resource Bank